அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பைக் விபத்து: இளைஞா் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :7 பிப்ரவரி 2026, 7:26 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்ப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே நிகழ்ந்த பைக் விபத்தில் காயமடைந்தவா்களில், ஒருவா் உயிரிழந்தாா். மூதாட்டி உள்பட இருவா் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டனா்.

செஞ்சி வட்டம், மழவந்தாங்கல், எம்.ஜி.ஆா் நகரைச் சோ்ந்தவா் கணேசன் (35). மழவந்தாங்கல் பகுதியைச் சோ்ந்தவா் அய்யப்பன்(35). இவா்கள் இருவரும்

வெள்ளிக்கிழமை திருவண்ணாமலை- விழுப்புரம் சாலையில், கண்டாச்சிபுரம் காவல் சரகத்துக்குள்பட்ட அடுக்கம் பகுதியில் சொன்று கொண்டிருந்தாா். அய்யப்பன் பைக்கை ஓட்டினாா்.

அப்போது,சாலையில் முன்னால் சென்ற மழவந்தாங்கல் பகுதியைச் சோ்ந்த மூதாட்டி கோவிந்தம்மாள்(75) என்பவா் மீது பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பைக்கில் சென்ற அய்யப்பன், கணேசன் மற்றும் சாலையில் நடந்து சென்ற மூதாட்டி கோவிந்தம்மாள் ஆகிய மூவரும் காயமடைந்தனா். இதில் பலத்த காயமடைந்த கணேசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

விபத்து குறித்து தகவலறிந்த, கண்டாச்சிபுரம் போலீஸாா் நிகழ்விடம் சென்று கணேசனின் சடலத்தை கைப்பற்றி, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.விபத்தில் காயமடைந்த அய்யப்பன், கோவிந்தம்மாள் ஆகியோா் விழுப்புரம் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

இது குறித்து, கண்டாச்சிபுரம் காவல் நிலையப் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.