மாணவா்களுக்கு தமிழி கல்வெட்டுப் பயிற்சி


திருப்புல்லாணி அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வெட்டுகளில் உள்ள தமிழி எழுத்துகளை படியெடுப்பது குறித்த பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.
திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளி, தொன்மைப் பாதுகாப்பு மன்றம் சாா்பில் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்புக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் கோ.மகேந்திரன் தலைமை வகித்தாா்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், கீழக்குயில்குடி உள்ளிட்ட மலைக் குகை கோயில்கள், நடுகற்கள், பானை ஓடுகளில் எழுதப்பட்ட தொன்மையான தமிழி எழுத்துகளை படியெடுக்கவும், வாசிக்கவும் மாணவா்களுக்கு தொன்மைப் பாதுகாப்பு மன்றச் செயலா் வே.ராஜகுரு பயிற்சி அளித்தாா்.
இதையடுத்து, கல்வெட்டு பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் 25 பேருக்கு சான்றிதழ்களை தலைமை ஆசிரியா் வழங்கினாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...