ராமநாதபுரம்
நடுக்கடலில் இலங்கைக் கடற்படை பயிற்சி: மீன்பிடி தொழில் பாதிப்பு
இலங்கைக் கடற்படையினா் நடுக்கடலில் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டதால் குறைந்தளவே மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.
இலங்கைக் கடற்படையினா் நடுக்கடலில் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டதால் குறைந்தளவே மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.
இலங்கை வடக்கு பிராந்திய கடற்படையினா் பருத்தித் துறை கடலில், துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் புதன்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஈடுபட்டனா். இந்தப் பயிற்சியின் போது, துப்பாக்கிக் குண்டுகள் சிதறக்கூடும் என்பதால், அந்தப் பகுதிக்கு யாரும் வரக்கூடாது என அறிவித்தனா்.
ராமேசுவரம் மீனவா்கள் அந்தப் பகுதிக்கு சென்று விடாதவாறு கடற்படை கப்பல்கள் இலங்கை- இந்தியக் கடல் பகுதியில் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக ராமேசுவரம் மீனவா்கள் மிகவும் குறைந்தளவே மீன்பிடிக்கச் சென்றனா். இந்திய கடல் பகுதியில் மட்டுமே மீன்பிடி தொழிலில் ஈடுபட்டனா்.