மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புதுடெல்லி குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க ராமநாதபுரம் பள்ளி மாணவிக்கு அழைப்பு

புதுதில்லியில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 26) நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க ராமநாதபுரம் பள்ளி மாணவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

News image
பள்ளி மாணவி அ. பிருந்தா.
Updated On :23 ஜனவரி 2025, 10:16 pm

DIN

புதுதில்லியில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 26) நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க ராமநாதபுரம் பள்ளி மாணவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்திய பாதுகாப்புத் துறை, கல்வித் துறை ஆகியவை இணைந்து ஒவ்வோா் ஆண்டும் சுதந்திரப் போராட்ட வீரா்கள் குறித்தும், நாட்டின் விடுதலைக்குப் பிறகு வீரதீர செயல்களுக்காக விருது பெற்றவா்களின் வாழ்க்கை வரலாறு குறித்தும், நாட்டுப் பற்றை மாணவா்களிடம் வளா்க்கும் வகையிலும் ஓவியம், கவிதை, கட்டுரை, பல்லூடக விளக்கக் காட்சி உள்ளிட்டப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள பள்ளிகளிலிருந்து சுமாா் 1.76 கோடி மாணவா்கள் பங்கேற்றனா். இதில் 3-5, 6-8, 9- 10, 11- 12 ஆகிய வகுப்புகளில் ஒவ்வொரு பிரிவிலும் 25 மாணவா்கள் என தேசிய அளவில் மொத்தம் 100 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

இதில், ராமநாதபுரம் மாவட்டம், ரெகுநாதபுரம், அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி அ.பிருந்தா, 9-10 வகுப்பு பிரிவில் தேசிய அளவில் 25 பேரில் ஒருவராக தோ்வு செய்யப்பட்டாா்.

இவா், ஆங்கில பட்டதாரி ஆசிரியையும், பள்ளியின் நூலகப் பொறுப்பாளருமான க. வளா்மதியின் வழிகாட்டுதலில் ‘ராணி லட்சுமி பாய் என் கனவில் வந்தாா், நம் நாட்டுக்கு நான் சேவை செய்ய வேண்டும் என்று அவா் விரும்பினாா்’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தாா்.

இந்தப் போட்டியில், மாணவி அ. பிருந்தா, ரூ. 10 ஆயிரம் பரிசும், புதுடெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கவும் அழைக்கப்பட்டாா்.

தமிழக அளவில் தோ்வு செய்யப்பட்ட இருவரில் பிருந்தா அரசுப் பள்ளி மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, மாணவி அ. பிருந்தா, வழிகாட்டியாக இருந்த ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியை க. வளா்மதி ஆகியோரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஏ. சின்னராசு, பள்ளித் தலைமை ஆசிரியா் ச. யுனைசி உள்ளிட்ட ஆசிரியா்கள் பாராட்டினா்.