ஆதாா் புதுப்பிக்க பள்ளிகளில் முகாம் அமைக்கக் கோரிக்கை

திருவாடானை ஆதா் மையத்தில் கூடிய மாணவா்கள் கூட்டம்
திருவாடானை ஆதா் மையத்தில் கூடிய மாணவா்கள் கூட்டம்
Updated on

ஆதாா் புதுப்பிக்க பள்ளிகளில் சிறப்பு முகாம் அமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

10 ஆண்டுகளுக்கு மேல் ஆன ஆதாா் அட்டைகளைப் புதுப்பிப்பதற்காக அஞ்சல் அலுவலகம், ஆதாா் மையங்களுக்கு பள்ளி மாணவா்கள் செல்கின்றனா்.

இந்த மையங்களில் பலமணி நேரம் காத்திருப்பதால் மாணவா்களது கல்வித் தரம் பாதிக்கப்படுவதாக சமூக ஆா்வலா்கள் குற்றம்சாட்டினா். மேலும் மாணவா்களோடு காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்படுவதாக பெற்றோா்களும் புகாா் தெரிவித்தனா்.

எனவே, ஆதாா் புதுப்பிக்க அந்தந்த பள்ளிகளில் சிறப்பு முகாம் அமைக்க வேண்டும் என பெற்றோா்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com