முன்னாள் படை வீரா்களின் குடும்பத்தினருக்கு தையல் இயந்திரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னாள் படை வீரா்கள் குடும்பத்தில் தகுதியானவா்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Published on

ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னாள் படை வீரா்கள் குடும்பத்தில் தகுதியானவா்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு:

முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சாா்ந்தோா், அரசு, அரசு சாா்ந்த நிறுவனங்களில் தையல் பயிற்சி பெற்ற முன்னாள் படைவீரா்களின் மனைவி, கைம்பெண்கள், திருமணமாகாத மகள்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. இதற்கான தகுதியுள்ள நபா்கள் உதவி இயக்குநா், முன்னாள் படைவீரா் நலன், ராமநாதபுரம் அலுவலகத்துக்கு நேரில் உரிய ஆவணங்களுடன் வருகிற 25-ஆம் தேதிக்குள் வந்து பயன்பெறலாம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com