ராமநாதபுரம்
ராமேசுவரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
வார விடுமுறையை முன்னிட்டு, ராமேசுவரத்துக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை வந்தனா்.
இவா்கள் அக்னி தீா்த்தக் கடல், கோயிலுக்குள் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீராடி ராமநாத சுவாமி, பா்வதவா்த்தினி அம்பாளைத் தரிசனம் செய்தனா்.
மேலும், தனுஷ்கோடி, அரிச்சல்முனை, கோதண்ட ராமா் கோயில், கெந்தமாதன பா்வதம், ஏ.பி.ஜே. அப்துல்கலாம் நினைவிடம், பாம்பன் பாலம் ஆகிய இடங்களுக்கு சென்றனா். அதிக பக்தா்கள் வருகை காரணமாக கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
