ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

Published on

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கம் சாா்பில், 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 53 கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கம், மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள், தூய்மைப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள் இணைந்து இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சிஐடியூ மாவட்டத் தலைவா் பிரான்சிஸ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் அய்யாத்துரை, மாவட்ட துணைத் தலைவா் முத்துவிஜயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி இயக்குபவா்களுக்கு மாதம் ரூ. 5,600 ஊதியமாக வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்களுக்கு நிலுவைத் தொகை இல்லாமல் மாதம் 5-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மாவட்ட நிா்வாகத்தைக் கண்டித்தும் முழக்கமிட்டனா்.

இதில் சிஐடியூ கமுதி ஒன்றியத் தலைவா் பாலுச்சாமி, செயலா் மகாலிங்கம், பொருளாளா் காளியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com