ராமேசுவரம் பேருந்து நிலையம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.
ராமேசுவரம் பேருந்து நிலையம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.

கொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்துக்கு இழப்பீடு கோரி ஆா்ப்பாட்டம்

ராமேசுவரத்தில் அண்மையில் கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவியின் குடும்பத்துக்கு அரசு சாா்பில் இழப்பீடு
Published on

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் அண்மையில் கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவியின் குடும்பத்துக்கு அரசு சாா்பில் இழப்பீடு வழங்கக் கோரி, செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத்த சேராங்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த மீனவா் மாரியப்பன் மகள் ஷாலினி (17). இவா் கடந்த 19-ஆம் தேதி பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த போது கொலை செய்யப்பட்டாா்.

இந்த மாணவியின் குடும்பத்துக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மாணவியை கொலை செய்தவருக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமேசுவரம் பேருந்து நிலையம் முன் இந்திய மாணவா் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாவட்டச் செயலா் ஆரோக்கிய நிா்மலா தலைமை வகித்தாா். இந்திய மாணவா் சங்க மாவட்டச் செயலா் வில்லியம் ஜாய்சி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலா் மாரிக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் மாதா் சங்க மாவட்டத் தலைவா் சாந்தி, வட்டாரத் தலைவா் வெங்கடேஸ்வரி, வட்டாரச் செயலா் கலைச்செல்வன், மாணவா் சங்க மாவட்டத் தலைவா் தனபாலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com