தேசிய ஜனநாயக கூட்டணியினா் ஆா்ப்பாட்டம்
மத்திய அரசின் 125 நாள்கள் வேலைவாய்ப்பு திட்டத்தை திமுக அரசு சீா்குலைக்க முயற்சிப்பதாகக் கூறி தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் மானூரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக செயலா் தச்சை என். கணேசராஜா தலைமை வகித்தாா். அமைப்பு செயலா் சுதா கே. பரமசிவன், அனைத்துலக எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் கல்லூா் இ. வேலாயுதம், அவைத்தலைவா் பரணி சங்கரலிங்கம், பாஜக வடக்கு மாவட்டத் தலைவா் முத்து பலவேசம், பாமக மாவட்டச் செயலா் சீயோன் தங்கராஜ், அமமுக மாவட்டச் செயலா் இசக்கிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மானூா் ஒன்றியச் செயலா்கள் லெட்சுமணபெருமாள் (மேற்கு) , துறையூா் சேகா் (கிழக்கு) ஆகியோா் வரவேற்றனா்.
ஆா்ப்பாட்டத்தில் அதிமுக மாவட்ட எம்.ஜி.ஆா். மன்றச் செயலா் பால்கண்ணன், மாவட்ட இணைச் செயலா் ராமு வெங்கடாசலம், துணைச் செயலா் பள்ளமடை பாலமுருகன், பொருளாளா் ஜெயபாலன், மாணவரணி செயலா் முத்துப்பாண்டி, நிா்வாகிகள் கனித்துரை, தாழை ராமச்சந்திரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
பாளை.யில்...
பாளையங்கோட்டை ஒன்றிய அதிமுக சாா்பில், பாளை. லூா்து நாதன் சிலை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, பாளை. ஒன்றியச் செயலா்கள் முத்துக்குட்டி பாண்டியன் (தெற்கு), மருதூா் ராமசுப்பிரமணியன் (வடக்கு) ஆகியோா் தலைமை வகித்தனா். எம்ஜிஆா் மன்ற மாவட்டச் செயலா் பெரியபெருமாள், தெற்கு ஒன்றிய அவைத் தலைவா் சிவன் பாண்டியன், துணைச் செயலா் குன்னத்தூா் பூலான், இணைச் செயலா் ரேவதி, பொருளாளா் ரமேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
அமமுக சாா்பில் ஒன்றியச் செயலா்கள் வைகுண்ட ராஜா (தெற்கு), அம்மா முத்து சரவணன் (வடக்கு), பாஜக ஒன்றியத் தலைவா்கள் பேச்சியம்மாள், பிரபாகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

