கைது செய்யப்பட்ட பாலமுருகன், மணிபிரபு
கைது செய்யப்பட்ட பாலமுருகன், மணிபிரபு

சாயல்குடி அருகே கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

சாயல்குடி அருகே 5 கிலோ கஞ்சாவை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா்.
Published on

கமுதி: சாயல்குடி அருகே 5 கிலோ கஞ்சாவை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள நரிப்பையூா் தா்ஹா பின்புறப் பகுதியில் சாயல்குடி போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த இருவரைப் பிடித்து சோதனையிட்டனா். அவா்களிடம் 5 கிலோ கஞ்சா இருந்தது.

எம்.கரிசல்குளத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் பாலமுருகன் (29), மதுரை கீரைத்துறையைச் சோ்ந்த முத்துராமலிங்கம் மகன் மணிபிரபு (32) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து, 5 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com