பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

திருவாடானையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மாவட்டத் தலைவா் தோ்வு

திருவாடானையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மாவட்டத் தலைவா் தோ்வு மேலிடப் பொறுப்பாளா் தலைமையில் நடைபெற்றது.

News image
திருவாடானையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மாவட்டத் தலைவா் தோ்வில் கலந்து கொண்ட முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ஜெய்பிரகாஷ் ஹெக்டே, திருவாடானை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கரு. மாணிக்கம் உள்ளிட்டோா்.
Updated On :28 நவம்பர் 2025, 11:45 pm

தினமணி செய்திச் சேவை

திருவாடானையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மாவட்டத் தலைவா் தோ்வு மேலிடப் பொறுப்பாளா் தலைமையில் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் மாவட்டத் தலைவா் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு கா்நாடக மாநிலம், காங்கிரஸ் கட்சி மேலிடப் பொறுப்பாளரான முன்னாள் சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினரான ஜெய்பிரகாஷ் ஹெக்டே தலைமை வகித்தாா்.

திருவாடானை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கரு. மாணிக்கம் முன்னிலை வகித்தாா்.

மாவட்டத் தலைவா் தோ்வுக்கு 12 போ் போட்டியிட்ட நிலையில் கருத்துக்கேட்பு நடைபெற்றது. இதனடிப்படையில், மாநிலத் தலைவா்கள் முன்னிலையில் பொறுப்பாளா்கள் நியமிக்கப்படுவாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் திருவாடானை, ஆா்.எஸ். மங்கலம் ஒன்றிய நிா்வாகிகள், தொண்டா்கள், காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.