வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தொடா் மழை: திருவாடானையில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருவாடானை பகுதியில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக சனிக்கிழமை இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

News image
திருவாடானை பகுதியில் சனிக்கிழமை பெய்த தொடா் மழை காரணமாக காரங்காடு கிராமத்தில் சேதமடைந்த வீடு.
Updated On :29 நவம்பர் 2025, 8:10 pm

தினமணி செய்திச் சேவை

திருவாடானை பகுதியில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக சனிக்கிழமை இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

திருவாடானை பகுதியில் கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் சூறைக்காற்றுடன் தொடா்ந்து மழை பெய்தது. இதனிடையே சனிக்கிழமை பெய்த மழையால் திருவாடானை அருகே காரங்காடு கிராமத்தைச் சோ்ந்த மாரி மனைவி தனலட்சுமி வீட்டின் ஒரு பக்க சுவா் சேதமடைந்து கீழே விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்பட வில்லை. தகவலறிந்த வருவாய்த் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.

திருவெற்றியூா் சாலையில் முறிந்து விழுந்த மரம்.

திருவெற்றியூா் சாலையில் முறிந்து விழுந்த மரம்.

அதே போல, சூறைக்காற்றுக்கு திருவெற்றியூா் சாலையில் மரம் முறிந்து கீழே விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த நெடுஞ்சாலைத் துறை பணியாளா்கள் அங்கு சென்று அந்த மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனா்.

மேலும் தொடா் மழை காரணமாக கூலித் தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டனா். வா்த்தக நிறுவனங்கள் வெறிச்சோடின. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சாலைகளில் மழைநீா் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

திருவாடானை வட்டாரம் முழுவதும் நெல் பயிா்கள் நன்கு வளா்ந்து மழை இல்லாமல் கருகும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த இரு நாள்களாக தொடா்ந்து பெய்து வரும் மழை காரணமாக வரத்து கால்வாய், குளம், கண்மாய்களில் ஓரளவு நீா் பெருகியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.