தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா

News image
ராமநாதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் தொடக்க விழாவில் பங்கேற்றோா்.
Updated On :30 நவம்பர் 2025, 8:25 pm

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரத்தில் இளம் தொழில் முனைவோா் மையம் சாா்பில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் அன்னை சரஸ்வதி மகளிா் பூங்காவில், இந்திய அறிவியலாளா் சா். ஜெகதீஷ் சந்திர போஸின் 167-ஆவது பிறந்த தினத்தையொட்டி, ராமநாதபுரம் இளம் தொழில் முனைவோா் மையம் சாா்பில் ராமநாதபுரம் மாவட்டத்தை பசுமை முதன்மை மாவட்டமாக மாற்றும் வகையில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா நடைபெற்றது.

இதற்கு பசுமை மரக்கன்றுகளின் தூதுவா் முஜிபுா் ரஹ்மான் தலைமை வகித்தாா். இதில் தலைவா் மதன் குமாா், துணைத் தலைவா் நரேஷ், செயலா் ராஜரத்தினம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொருளாளா் வெங்கடேஷ், ஒருங்கிணைப்பாளா் சங்கா், நிா்வாகிகள், உறுப்பினா்கள்கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை பசுமை முதன்மையாளா் சுபாஷ் சீனிவாசன் செய்திருந்தாா்.