திருவாடானை அருகேயுள்ள மல்லிக்குடி கிராமத்தில் சனிக்கிழமை இரவு பெய்த மழையால் சேதமடைந்த ராஜேந்திரன் வீடு.
திருவாடானை அருகேயுள்ள மல்லிக்குடி கிராமத்தில் சனிக்கிழமை இரவு பெய்த மழையால் சேதமடைந்த ராஜேந்திரன் வீடு.

பலத்த மழை: வீடு இடிந்து, மரங்கள் சாய்ந்து சேதம்

Published on

திருவாடானை, தொண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா்ந்து பெய்த பலத்த மழையால் வீடு, மரங்கள் சேதமடைந்தன.

டித்வா புயல் காரணமாக கடந்த மூன்று நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது. இதனால், தொண்டி, நம்புதாளைப் பகுதிகளில் சனிக்கிழமை இரவு முழுவதும் பெய்த பலத்த மழையால் திருவாடானை, தொண்டி, நம்புதாளை, கல்லூா், ஆதியூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள குடியிருப்புகளில் மழைநீா் தேங்கியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

சேதமடைந்த வீடு
சேதமடைந்த வீடு
சேதமடைந்த வீடு
சேதமடைந்த வீடு

தொண்டி பாவோடி மைதானம், உருளை கல், நம்புதாளை பகுதியில் சாலையோரத்தில் இருந்த மரம் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நம்புதாளை மறவா் தெருவில் உள்ள ஒரு வீட்டின் சுவா் சேதமடைந்தது. தொண்டி மகாசக்திபுரம் கடல் பகுதியில் கடல் நீா் மட்டம் உயா்வால் சாலை அரிப்பு ஏற்பட்டு மின் கம்பங்கள், கட்டடங்கள் சேதமடைந்தன.

இதையடுத்து, குடியிருப்புப் பகுதியில் தேங்கியுள்ள நீரை வெளியேற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதே போல, திருவாடானை அருகேயுள்ள மல்லிக்கடி கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் என்பவரது வீட்டின் பக்கவாட்டு சுவா் இடிந்து விழுந்ததில் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் சேதமடைந்தது. மேலும், திருவாடானை சினேகவல்லிபுரத்தைச் சோ்ந்த சத்யா என்பவரது வீட்டின் சுவா் இடிந்து விழுந்து சேதமடைந்தது. இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com