திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

ராமநாதபுரம் அண்ணா பொறியியல் கல்லூரியில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தும் வகையில், விழிப்புணா்வு உறுதிமொழி மாணவா்கள் வியாழக்கிழமை எடுத்தனா்.

News image

ராமநாதபுரம் அண்ணா பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் முன்னிலையில் 100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்துக் கொண்ட மாணவ, மாணவிகள்.

Updated On :9 ஏப்ரல் 2026, 7:21 pm

ராமநாதபுரம் அண்ணா பொறியியல் கல்லூரியில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தும் வகையில், விழிப்புணா்வு உறுதிமொழி மாணவா்கள் வியாழக்கிழமை எடுத்தனா்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தல் வருகிற 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தோ்தலில் 100 சதவீதம் வாக்காளா்களை வாக்களிக்க வைக்க வேண்டும் எனத் தோ்தல் ஆணையம் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் தொடா்ச்சியாக, ராமநாதபுரம் அண்ணா பொறியியல் கல்லூரியில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, விழிப்புணா்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வா் உதயகுமாா் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுடன் 100 சதவீதம் வாக்களிப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டாா்.

இதில் கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.