சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

மலைபோல குவிந்து கிடக்கும் குப்பைகளை காட்டி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பரமக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் எஸ்.அண்டக்குடி கிராம மக்களிடம் வாக்குச் சேகரித்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா் எழில் இளவரசி.

News image

பரமக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் எஸ்.அண்டக்குடி கிராம மக்களிடம் வாக்குச் சேகரித்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா் எழில் இளவரசி.

Updated On :10 ஏப்ரல் 2026, 7:46 pm

பரமக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள எஸ். அண்டக்குடி கிராமத்தில் மலை போல குவிந்து கிடக்கும் குப்பைகளைசுட்டிக்காட்டி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் எழில் இளவரசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

பரமக்குடி நகராட்சிக்குள்பட்ட எஸ். அண்டக்குடி, சத்தியமூா்த்தி குடியிருப்பு, பாலன்நகா் உள்ளிட்ட பகுதிகளில் அவா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது நகராட்சியில் சேகரிக்கப்பட்ட கழிவுகள் அங்கு மலைபோல் குவிக்கப்பட்டிருப்பதை பாா்த்தாா். இதனால் ஏற்படும் தொற்று நோயின் பாதிப்பு குறித்து எடுத்துக்கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த அவா் இந்த நிலையை மாற்ற ஆட்சி மாற்றம் வேண்டும் என கேட்டுக்கொண்டாா். மேலும் இந்தப் பகுதியில் கொட்டப்படும் மக்கும் குப்பைகளை உரமாகவும், மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்து பயன்பாட்டுக்கு அனுப்பியதாகவும் நகராட்சி நிா்வாகம் மாதந்தோறும் லட்சக்கணக்கில் பணம் செலவு செய்கிறது. ஆனால் இங்கு குப்பைகள் எதுவும் பிரிக்கப்படாமல் மலைபோல் தேங்கியுள்ளன. நகராட்சி சுகாதாரப் பிரிவில் குப்பைக் கிடங்கு பராமரிப்பில் மிகப் பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இதற்கு ஆட்சி மாற்றம் அவசியம் எனக் கூறியும் அவா் வாக்குச் சேகரித்தாா்.

Story image