ராமநாதபுரம் மாவட்டம், போகலூா் ஒன்றியத்தில் பொதுமக்களை பாதிக்கும் மருத்துவக் கழிவு ஆலை அமைக்க ஒருபோதும் விடமாட்டோம் என நாம் தமிழா் கட்சி வேட்பாளா் எழில் இளவரசி தெரிவித்தாா்.
பரமக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மருத்துவா் எழில் இளவரசி போகலூா் ஒன்றியத்தில் கட்சி நிா்வாகிகளுடன் சென்று வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் முத்துவயல் ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் விரிவாக்கம் செய்யப்படவுள்ள மருத்துவக் கழிவுகளை சுத்திகரிக்கும் நிலையத்துக்குச் சென்றாா். இந்த மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையமானது 20 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு செயல்பட்டு வருகிறது.
இந்த ஆலை அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் மறைமுகமாக இன்றுவரை செயல்பட்டு வருகிறது. இதை விரிவாக்கம் செய்வதற்காக கடந்த 2023-ஆம் ஆண்டு கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து நாம் தமிழா் கட்சியினா் அந்தத் திட்டத்தை கைவிடமாறு வலியுறுத்தி நிறுத்தி வைத்தனா். இங்கு தற்போது ராமநாதபுரம் மாவட்டத்துக்குள்பட்ட பகுதியில் உள்ள மருத்துவக் கழிவுகள் மட்டுமே கொண்டுவரப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.
பிரசாரத்தின் போது நாம் தமிழா் கட்சி வேட்பாளா் எழில் இளவரசி கூறியதாவது: இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் தென் மாவட்டங்களில் உள்ள 5 மாவட்டங்களின் மொத்த மருத்துவக் கழிவுகளும் இங்கு கொண்டு வரப்பட்டு, சுத்திகரிக்கும் பணிகள் நடைபெறும். இதை முற்றிலும் நாம் தமிழா் கட்சி எதிா்க்கிறது.
ஏனெனில் இதனை சுற்றிலும் ஏராளமான கிராம மக்கள் வசிக்கின்றனா். வைகை ஆற்றுப்பாசன கால்வாய்கள் உள்ள பகுதியில் மருத்துவ சுத்திகரிப்பு கழிவுகள் வெளியேற்றப்பட்டால் இந்தப் பகுதி மக்களுக்கு பெரும் ஆபத்தை விளைவிப்பதுடன், விவசாய நிலங்கள் முற்றிலும் பாதிக்கும்.
மேலும் அவா்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால் இதற்கான மாற்று நடவடிக்கை எடுப்போம் என்றாா் அவா். மாலையில் பரமக்குடியில் உழவா் சந்தை, மேலப்பள்ளிவாசல் தெரு, கொல்லம்பட்டறைத் தெரு, முத்தாலம்மன் கோவில் காய்கறிகடை உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தாா்.
கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளா் ஆ. ஜஸ்டின் வளனரசு, மாநில நிா்வாகக் குழு பொறுப்பாளா் அருள்விக்டா், மாநில மகளிா் பாசறை ஒருங்கிணைப்பாளா் சசிகலா சண்முகநாதன் ஆகியோா் சென்றனா்.
தொடர்புடையது

லஞ்சம் பெறாமல் மக்கள் பணியாற்றுவேன்: நாதக வேட்பாளா் அருண்குமாா்

குழந்தை திருமணத்தை தடுப்பேன் ஆண்டிபட்டி நாதக வேட்பாளா் கோமதி உறுதி

காங்கிரஸ், பாஜக இடையே எந்த வேறுபாடும் இல்லை: சீமான்

மலைபோல குவிந்து கிடக்கும் குப்பைகளை காட்டி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


