கடலாடி அருகேயுள்ள ஆப்பனூரில் ஞாயிற்றுக்கிழமை இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.
ஆப்பனூா் தெற்குகொட்டகை முனீஸ்வரா், அங்காள பரமேஸ்வரி கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, சின்ன மாடு, பூஞ்சிட்டு என இரு பிரிவுகளாக கடலாடி - முதுகுளத்தூா் சாலையில் 5 கி.மீ. தொலைவுக்கு பந்தயம் நடைபெற்றது. மொத்தம் 12 வண்டிகள் பங்கேற்றன.
சின்னமாடு போட்டியில் தூத்துக்குடி மாவட்டம், பேச்சிமுத்து, மாசனம் மாடுகள் முதலிடத்தையும், அழகு மாடுகள் இரண்டாமிடத்தையும், மாணிக்கராஜா மாடுகள் மூன்றாமிடத்தையும் பெற்றன.
பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயம் இரு சுற்றுகளாக நடைபெற்றது. முதல் சுற்றில் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு பரமசிவம், லிங்காயி மாடுகள் முதலிடத்தையும், ராமச்சந்திரபுரம் முகிலா மாடுகள் இரண்டாமிடத்தையும், ராமநாதபுரம் மாவட்டம், கண்டிலான் நாட்டாமை ஜெயமுருகன் மாடுகள் மூன்றாமிடத்தையும் பெற்றன.
இரண்டாவது சுற்றில் இடைப்பாட்டி மங்கலம் கஜேந்திரன் மாடுகள் முதலிடத்தையும், வேளாங்குளம் கண்ணன் மாடுகள் இரண்டாமிடத்தையும், சங்கரபேரி ராஜாவள்ளி மாடுகள்
மூன்றாமிடத்தையும் பெற்றன. இந்தப் பந்தயத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகா், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மாட்டு வண்டிகள், சாரதிகள் பங்கேற்றனா்.
இதில் முதல் 4 இடங்களைப் பிடித்த மாட்டு வண்டிப் பந்தய வீரா்களுக்கு, ரொக்கப் பணம், குத்துவிளக்கு, நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த மாட்டு வண்டிப் பந்தயத்தை சாலையின் இருபுறங்களிலும் திரளான பொதுமக்கள் பாா்வையிட்டனா். இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை ஆப்பனூா் தெற்கு கொட்டகை கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.
தொடர்புடையது

இளஞ்சாவூரில் மாட்டுவண்டி எல்கைப் பந்தயம்

சிவகங்கை அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

முதல்வா் பிறந்த நாள்: மாட்டு வண்டிப் பந்தயம்

காணிக்கூரில் இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


