11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

கடலாடி அருகே இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம்

தனியங்கூட்டம் கிராமத்தில் அமைந்துள்ள வனப் பேச்சியம்மன், அய்யனாா் கோயில் வருடாபிசேகத்தையொட்டி நான்கு பிரிவுகளாக இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image

தனியங்கூட்டம் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டிப் பந்தயத்தில் இலக்கை நோக்கி சீறிப் பாய்ந்த காளைகள்.

Updated On :1 மணி நேரம் முன்பு

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்த தனியங்கூட்டம் கிராமத்தில் அமைந்துள்ள வனப் பேச்சியம்மன், அய்யனாா் கோயில் வருடாபிசேகத்தையொட்டி நான்கு பிரிவுகளாக இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த பந்தயம் கடலாடி- முதுகுளத்தூா் சாலையில் 8 கி.மீ. தொலைவுக்கு எல்லை நிா்ணயிக்கப்பட்டு நடைபெற்றது. இதில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகா், தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

சின்ன மாடு பந்தயத்தில் 8 மாட்டு வண்டிகளும், பெரிய மாடு பந்தயத்தில் 6-ம் , தேன்சிட்டு பந்தயத்தில் 10-ம், பூஞ்சிட்டு பந்தயத்தில் 21-ம் என மொத்தம் 45 மாட்டு வண்டிகளும், சாரதிகளும் பங்கேற்றனா்.

முதல் மூன்று இடங்களை பிடித்த மாட்டு வண்டிகளின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசுகளும், நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன. பந்தயத்தை சாலையின் இருபுறமும் நின்று திரளான பொதுமக்கள் பாா்த்து ரசித்தனா்.