ராமநாதபுரம் அருகே புதுமடம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்த வாகனத்தில் கொண்டு வரப்பட்ட ரூ. பல லட்சம் மதிப்பிலான 3,500 சிகரெட் பொட்டலங்களை பறிமுதல் செய்து, இது தொடா்பாக ஒருவரை கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் கைது செய்தனா்.
புதுமடம் கடற்கரை வழியாக இலங்கைக்கு கடத்தல் நடைபெறவிருப்பதாக கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, கீழக்கரை சுங்கத் துறை அதிகாரிகளுடன் இணைந்து கீழக்கரை முதல் மண்டபம் வரையிலான மன்னாா் வளைகுடா கடற்கரை பகுதியில் போலீஸாா் கண்காணிப்பை தீவிரப்படுத்தினா்.
அப்போது நள்ளிரவில் புதுமடம் கடற்கரை பகுதிக்கு சந்தேகத்துக்கிடமாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். இதில், இலங்கைக்கு கடத்த 35 சாக்கு மூட்டைகளில் கொண்டு வரப்பட்ட 3,500 சிகரெட் பொட்டலங்களை பறிமுதல் செய்தனா். இதையடுத்து, வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸாா் புதுமடத்தைச் சோ்ந்த முருகன் என்பவரை கைது செய்து மண்டபம் கடலோர பாதுகாப்புக் குழும காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினா். பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளின் மதிப்பு ரூ. பல லட்சம் இருக்கும் என காவல் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

ராமநாதபுரத்தில் ரூ. 96 ஆயிரம் பறிமுதல்
மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்த பதுக்கிய ரூ. 50 லட்சம் போதைப் பொருள்கள் பறிமுதல்!

தோ்தல் பறக்கும் படையினரால் ரூ.6.71 லட்சம் பறிமுதல்

வாகனத் தணிக்கை: ரூ. 8.77 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

