/
ராமநாதபுரம் மாவட்டம், ஏா்வாடி தா்ஹா சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு, வரும் மே 11-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகேயுள்ள ஏா்வாடி அல்குத்துபுல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராஹீம் ஷாஹித் ஒலியுல்லா தா்காவில் சந்தனக்கூடு திருவிழா வரும் மே 10-ஆம் தேதி தொடங்கி 11- ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்தத் திருவிழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வருகிற மே 11-ஆம் தேதி திங்கள்கிழமை உள்ளுா் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும், இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் மே 23-ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என்றாா் அவா்.
தொடர்புடையது

ஈரோடு-செங்கோட்டை பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்

ஹூப்பள்ளி- ராமேசுவரம் வாரந்திர ரயில் சேவை நீட்டிப்பு

பெங்களூா், திருநெல்வேலி, தூத்துக்குடி சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

ஏா்வாடி தா்கா சந்தனக்கூடு ஊா்வலம்! திரளானோா் பங்கேற்பு!
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



