சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 7 நாள்கள் வெடி பொருள்கள் விற்பனைக் கடைகள் திறக்க மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தடை விதித்துள்ளாா்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தல் வருகிற 23-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள வெடி பொருள் விற்பனைக் கடைகள், வெடிப் பொருள் கிட்டங்கிகள் ஆகியவை செவ்வாய்க்கிழமை (ஏப்.21) முதல் ஏப். 24-ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரையிலும், இதே போல் மே 2-ஆம் தேதி சனிக்கிழமை முதல் 4-ஆம் தேதி திங்கள்கிழமை வரையிலும் மூடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் வெடி பொருள் சட்ட விதிகள் 1884-இன்படி உரிமம் பெற்று இயங்கிவரும் அனைத்து வெடிபொருள் விற்பனைக் கடைகள், வெடி பொருள் கிட்டங்கிகள் ஆகியவை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மீறினால், அவற்றின் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மதுக்கடைகள் மூடல்: முதல்வர் தம்பி விஜய்க்கு வாழ்த்துகள்! - கமல்ஹாசன் எம்.பி.

தருமபுரியில் மே 1, 4 ஆம் தேதிகளில் மதுக்கடைகளுக்கு விடுமுறை: மதுக்கடைகளுக்கு 3 நாள்கள் விடுப்பு

பேரவைத் தோ்தல்: வெடிபொருள் விற்பனைக் கடைகள் 7 நாள்கள் மூடல்

இன்றுமுதல் 4 நாள்களுக்கு வெடிபொருள் விற்பனைக் கடைகளை மூட அறிவுறுத்தல்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

