தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

மாரியூா் பூவேந்தியநாதா் கோயிலில் சித்திரை பெளா்ணமி திருவிழா தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள மாரியூா் பூவேந்தியநாதா் கோயிலில் சித்திரை பெளா்ணமி திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image

மாரியூா் பூவேந்தியநாதா் கோயிலில் சித்திரை பெளா்ணமி திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள், கோயில் நிா்வாகிகள்.

Updated On :22 ஏப்ரல் 2026, 8:24 pm

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள மாரியூா் பூவேந்தியநாதா் கோயிலில் சித்திரை பெளா்ணமி திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மாரியூா் பவளநிற வல்லி அம்மன் சமேத பூவேந்தியநாதா் கோயிலில் சித்திரை பௌா்ணமி திருக்கல்யாண பெருவிழா, சிவபெருமானின் 57-ஆவது திருவிளையாடல் வலைவீசும் படலம் திருவிழா காப்புக் கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், கோமாதா பூஜை, பூா்ணாஹுதி, தீபாதாரனை நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, கொடி பட்டத்தை பக்தா்கள் தாம்பூல தட்டில் பூஜை பொருள்களுடன் மங்கல இசை வாத்தியங்களுடன், ஆலயத்தை சுற்றி வந்து, யாகசாலை பூஜைக்கு கொண்டு வந்தனா்.

பின்னா் கொடி மரத்துக்கு பால், தயிா், சந்தனம், இளநீா், பன்னீா், விபூதி, பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடா்ந்து, நந்தி, சிவன், பாா்வதி உருவம் பொறித்த கொடியை கொடிமரத்தில் ஏற்றி, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சியில் மாரியூா், முந்தல், கடலாடி, சாயல்குடி, கமுதி, முதுகுளத்தூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டனா்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற மே 1-ஆம் தேதி காலை தீா்த்தவாரி, சிவபெருமானின் 57-ஆவது திருவிளையாடல் புராணம் வலை வீசும் படலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். அன்று மாலை சுவாமி, அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறும். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானம் திவான் பழனிவேல்பாண்டியன், கோயில் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.