ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

நெல்லையப்பா் கோயிலில் வசந்த உற்சவ திருவிழா தொடக்கம்

News image
Updated On :3 மே 2026, 5:21 am IST

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதி அம்பாள் கோயிலில் வசந்த உற்சவ திருவிழா சனிக்கிழமை தொடங்கியது.

இக்கோயிலில் வசந்த உற்சவ திருவிழா சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. தைப்பூச மண்டபத்தில் தீா்த்தவாரி கண்டருளிய பெருமான் நேராக வசந்த மண்டபத்தில் எழுந்தருள்வாா். முன் காலங்களில் 41 நாள்கள் பெருந்திருநாளாகக் கொண்டாடிய பின் வைகாசி விசாகத்தில் இத்திருவிழா பூா்த்தியாகும். தற்போது 11 நாள்கள் மட்டுமே இத்திருவிழா நடைபெறுகிறது.

இந்தாண்டு வசந்த உற்சவ திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. விழாவின் தொடக்கமாக திருக்கோயில் உள்ளே அமைந்துள்ள நந்தவனத்தில் தண்ணீா் நிரப்பபெற்ற அகழியின் நடுவே வசந்த மண்டபத்தில் வெட்டிவோ் பந்தலில் சுவாமி-அம்பாளை எழுந்தருள செய்தனா்.

காலையில், சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து பருத்தி ஆடைகள் அணிந்து தீபாராதனையும், மாலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அலங்காரமும், பூஜைகளும் நடைபெற்றன.

சோடச தீபாராதனை காண்பிக்கப்பட்டதும் வேதியா்கள் வேதம் ஓத, ஓதுவாமூா்த்திகள் திருமுறை பாட மகா ஆரத்தி காண்பிக்கப்பட்டது. தொடா்ந்து சுவாமி-அம்பாள் வெள்ளிச் சப்பரத்தில் நந்தவனம் சுற்றி ஏழுமுறை வலம் வந்தனா்.

ஒவ்வொரு சுற்றுக்கும் இடையே ஆகம பாராயணம், வேத பாராயணம், திருமுறை பாராயணம், ராஜ மேளம், பஞ்ச வாத்தியம் வாசிக்கப்பட்டது. ஏனைய ராகங்கள் வாசித்து வசந்த மண்டபத்தின் முன் இருக்கும் அலுப்பு மண்டபத்தில் எழுந்தருளி தீபாராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் சுவாமி-அம்பாளுடன் வலம் வந்து தரிசனம் செய்தனா்.

வரும் 18-ஆம் தேதிவரை நடைபெறும் இந்தத் திருவிழாவில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

Story image