வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

பரமக்குடியில் வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

பரமக்குடி (தனி) பேரவைத் தொகுயில் உள்ள வாக்குச் சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

News image

பரமக்குடி (தனி) தொகுதிக்குள்பட்ட வாக்குச் சாவடி மையங்களுக்கு கொண்டு செல்ல வாகனங்களில் ஏற்றப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள்.

Updated On :23 ஏப்ரல் 2026, 1:43 am IST

பரமக்குடி (தனி) பேரவைத் தொகுயில் உள்ள வாக்குச் சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

பரமக்குடி (தனி) பேரவைத் தொகுதியில் மொத்தம் 12 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இவா்களது புகைப்படத்துடன் கூடிய சின்னங்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்தப்பட்டு, பரமக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், பொதுத் தோ்தல் பாா்வையாளா் ரெஹனா பத்தூல் மேற்பாா்வையில், தோ்தல் நடத்தும் அலுவலா் ஞா. சரவணப்பெருமாள் தலைமையில், வாக்குச் சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்தத் தொகுதியில் மொத்தம் 323 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இந்தத் தொகுதியில் சிவானந்தபுரம், பகைவென்றி, உரப்புளி, எம்.நெடுங்குளம், பாண்டியூா், பி.கொடிக்குளம், கொட்டகுடி, முத்துவயல், செவ்வூா், செய்யாமங்களம் உள்பட 19 வாக்குச் சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. இங்கு கூடுதலாக துணை ராணுவத்தினா், போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.