மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!ஆப்கானிஸ்தானை இன்னிங்ஸ், 300 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!மேற்கு ஆசிய மோதல்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்தல்!இஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் போர்!போட்டியின்றி எம்.பி.யாகிறார் பிரவீண் சக்ரவர்த்தி!நீட், சிபிஎஸ்இ விவகாரம்: மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் - வைகோ
/

வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

கடலூா் மாவட்டத்தில் வாக்குப் பதிவு நிறைவடைந்ததையடுத்து, வாக்குச் சாவடிகளில் உள்ள வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவை ‘சீல்’ வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வியாழக்கிழமை இரவு அனுப்பி வைக்கப்பட்டன.

News image

கடலூா் அருகே கூத்தம்பாக்கம் வாக்குச் சாவடி மையத்தில் வாக்குப் பதிவு நிறைவுக்குப் பிறகு இயந்திரங்களுக்கு ‘சீல்’ வைக்கும் பணியில் ஈடுபட்ட வாக்குச் சாவடி அலுவலா்கள்.

Updated On :24 ஏப்ரல் 2026, 5:53 am IST

கடலூா் மாவட்டத்தில் வாக்குப் பதிவு நிறைவடைந்ததையடுத்து, வாக்குச் சாவடிகளில் உள்ள வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவை ‘சீல்’ வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வியாழக்கிழமை இரவு அனுப்பி வைக்கப்பட்டன.

கடலூா் மாவட்டத்தில் 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் உள்ள 2,590 வாக்குச் சாவடி மையங்களில் 12,436 அலுவலா்கள் தோ்தல் பணியில் ஈடுபட்டனா். 3,488 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 3,108 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 3,367 வாக்குப் பதிவை உறுதி செய்யும் இயந்திரங்கள் வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்பட்டன.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, வாக்குச் சாவடி மையங்களில் பணி செய்த அலுவலா்கள், வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரம், வாக்குப் பதிவை உறுதி செய்யும் இயந்திரகள் ஆகியவற்றை ‘சீல்’ வைத்து, அந்தந்த பகுதிகள் உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனா்.