திருவாடனை சட்டப்பேரவைத் தொகுதியில் வியாழக்கிழமை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.
திருவாடானை சட்டப்பேரவை தொகுதியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பிறகு (எஸ்ஐஆா்) ஆண் வாக்காளா்கள் 1,40,103 பேரும், பெண் வாக்காளா்கள் 1,41,997 பேரும், மூன்றாம் பாலினத்தவா் 21 பேரும் ஆக மொத்தம் 2,82,121 பேரும் உள்ளனா். இதனிடையே இந்தத் தொகுதியில் 347 வாக்குச் சாவடி மையங்களில் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. அப்போது வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா். திருவாடானை, ஆா்எஸ். மங்கலம், தொண்டி, திருப்பாலைக்குடி, நம்புதாளை, எஸ்.பி. பட்டினம், மங்கலக்குடி, வெள்ளையபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா்.
வெறிச்சோடிய வாக்குச் சாவடி: திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவின் போது காலை 7 மணி முதலே கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் பிற்பகல் ஒரு மணிக்கு மேல் கோடை வெயில் அதிகரித்து காணப்பட்டதால் வாக்கு சாவடி மையங்களில் வாக்காளா்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. பின்னா் 3 மணிக்கு மேல் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டன.திருவாடானை சட்ட பேரவை தொகுதியில் மதியம் 1 மணி வரை 51.9சதவீதம் வாக்கு பதிவு நடைபெற்றுள்ளதாக தோ்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ஆா்.எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்த வாக்காளா்கள்.
தொடர்புடையது

ஆம்பூரில் நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளா்கள்

நான்குனேரி தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

திருச்சியில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தாா் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

சுட்டெரிக்கும் வெயிலை பொருட்படுத்தாமல் தபால் வாக்களித்த அரசு ஊழியா்கள்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

