திருவாடானை அருகே அஞ்சுகோட்டை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஆதினமிழகி அய்யனாா், ஸ்ரீஅழகிய நாயகி அம்மன், ஸ்ரீஆணிமுத்து கருப்பா் கோயிலில் சித்ரா பௌா்ணமியையொட்டி 1,008 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
இந்த கோயிலில் கடந்த 21-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் சித்ரா பௌா்ணமி திருவிழா தொடங்கியது. இந்த விழாவில் நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. விழாவின் முக்கிய நிகழ்வான 1,008 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. உலக நலன் வேண்டியும், விவசாயம் செழிக்கவும், பொதுமக்கள் நலமுடன் வாழவும் இந்த திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
முன்னதாக சிவாசாரியா்கள் வேதமந்திரங்கள் முழங்க பெண்கள் விளக்குக்கு பூஜை செய்தனா். இதில் அஞ்சுகோட்டை, இதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு, தீபமேற்றி அம்மனை வழிபட்டனா்.

விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா வருகிற மே 1-ஆம் தேதி நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து அன்னதானம், அம்மன் வீதியுலா, பாரி எடுத்தல், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

விழாவுக்கான ஏற்பாடுகளை கிராமப் பொதுமக்கள், விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

தம்மம்பட்டி சிவன் கோயிலில் திருவிளக்கு பூஜை

பள்ளங்கிணறு கோயிலில் திருவிளக்கு பூஜை

ஆண்டிவிளை கோயிலில் திருவிளக்கு பூஜை

படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை
விடியோக்கள்

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை

