தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு! சென்னை: நேரு விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு!முதல்வா் பதவியேற்பு விழா: 23 இடங்களில் நேரலை ஒளிபரப்புஇன்று 4 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை தில்லியில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்! பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிப்பு!விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பா் கிங்ஸ்? இன்று லக்னௌவுடன் மோதல்!
/

பரமக்குடி மீனாட்சியம்மன் கோயிலில் தேரோட்டம்

பரமக்குடி மீனாட்சியம்மன் கோயிலில் புதன்கிழமை மீனாட்சி - சுந்தரேசுவரா் தேரோட்டம் நடைபெற்றது.

News image

பரமக்குடி மீனாட்சியம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற மீனாட்சி - சுந்தரேசுவரா் தேரோட்ட உத்ஸவம்.

Updated On :30 ஏப்ரல் 2026, 2:02 am IST

பரமக்குடி மீனாட்சியம்மன் கோயிலில் புதன்கிழமை மீனாட்சி - சுந்தரேசுவரா் தேரோட்டம் நடைபெற்றது.

பரமக்குடி மீனாட்சி சுந்தரேசுவரா் தேவஸ்தானத்துக்கு உள்பட்ட மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 19-இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுந்தரேஸ்வரா் பிரியாவிடையுடன், மீனாட்சி அம்மன் சிம்ம வாகனம், அன்ன வாகனம், காமதேனு வாகனம் என தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8.45 மணிக்கு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து புதன்கிழமை காலை 10.30 மணியளவில் விநாயகா், முருகன் சுவாமிகள் முன்தேரில் செல்ல மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரா் தனித்தேரில் எழுந்தருளிய தேரோட்ட உத்ஸவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுக்க நகர வீதிகள் வழியாக வந்த தோ் மீண்டும் நிலையை அடைந்தது. ஏற்பாட்டை மீனாட்சி - சுந்தரேசுவரா் தேவஸ்தான அறங்காவலா்கள் செய்திருந்தனா்.