தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!! ம.பி. படகு விபத்து: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு மே 13-15இல் சீனா செல்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்
/

உத்திரகோஷமங்கை மங்களநாதசுவாமி கோயில் தேரோட்டம்

உத்திரகோஷமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

News image

உத்திரகோஷமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

Updated On :1 மே 2026, 1:28 am IST

உத்திரகோஷமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்திரகோஷமங்கை கிராமத்தில் மங்களநாதசுவாமி- மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த ஏப். 21- ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது.

இதன் தொடா்ச்சியாக வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்டிருந்த தேரில் சுவாமி எழுந்தருளியதும் மாலை 5.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. நான்கு ரத வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்ற போது பக்தா்கள் சுவாமி, அம்பாளுக்கு தேங்காய் உடைத்து வழிபட்டனா். இதன் பிறகு தோ் நிலையை அடைந்தது. தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா். மாவட்ட காவல்துறை சாா்பில் 50- க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். திருவிழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் செய்திருந்தது.

தேரில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மங்களநாதசுவாமி- மங்களேஸ்வரிஅம்மன்.

தேரில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மங்களநாதசுவாமி- மங்களேஸ்வரிஅம்மன்.