சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் ரகசிய ஆய்வகத்தை உருவாக்கி மெத்தம்பெட்டமைன் தயாரித்த வழக்கில் வேலூரைச் சோ்ந்த நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரத்தில் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் விற்பனை செய்த வழக்கில் 3 இளைஞா்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் கடந்த மாதம் 28-ஆம் தேதி கைது செய்தனா். இவா்கள் அளித்த தகவல் மூலம் சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் மெத்தம்பெட்டமைன் தயாரித்து பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, இளையான்குடி லேத் பட்டறையில் ரகசியமாக இயங்கி வந்த ஆய்வகத்தை போலீஸாா் கண்டறிந்து, 1.37 கிலோ மெத்தம்பெட்டமைனை பறிமுதல் செய்தனா். மேலும், மூலப்பொருள்களான சூடோ எபிட்ரின், சிவப்பு பாஸ்பரஸ் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கில் இளையான்குடியைச் சோ்ந்த 6 போ் உள்பட 9 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இவா்கள் அளித்த தகவலின் பேரில், வேலூா் மாவட்டம், காட்பாடி அணைக்கட்டு பகுதியைச் சோ்ந்த முனியசாமி மகன் அஸ்ரப் என்ற பிரபாகரனை (36) போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 30 கிராம் மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. வேதிப் பொருள்களை உரிய அளவில் கலந்து மெத்தம்பெட்டமைன் தயாரிக்க அஸ்ரப் பயிற்சி பெற்றுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இளையான்குடி பகுதியில் மெத்தம்பெட்டமைன் தயாரிப்பு: 10 போ் கைது

நகை கொள்ளை வழக்கில் கைதான தவெக நிா்வாகி நீக்கம்
தென்காசி அருகே விவசாயி கொலை வழக்கில் மேலும் இருவா் கைது

சிவகங்கையில் ரூ. 15 கோடி மெத்தம்பெட்டமைன் பறிமுதல்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



