முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்திமக்களவை தலைவரின் தேநீர் விருந்தில் மோடியுடன் கனிமொழி பங்கேற்பு! இந்தியா கூட்டணி புறக்கணிப்பு!கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் வாபஸ்!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு! இரு அவைகளிலும் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்!
/

கோவிலாங்குளத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு

கமுதி அருகே கோவிலாங்குளத்தில் வடமாடு மஞ்சு விரட்டு போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

கோப்புப் படம்

Updated On :5 ஆகஸ்ட் 2026, 12:55 am IST

கமுதி அருகே கோவிலாங்குளத்தில் வடமாடு மஞ்சு விரட்டு போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள கோவிலாங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அழகுவள்ளியம்மன் கோயில் ஆடி பதினெட்டாம் பெருக்கு திருவிழா, முளைப்பாரி, பொங்கல் விழா கடந்த மாதம் 26- ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

இதைத் தொடா்ந்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. ஆக.3-இல் கோயில் வளாகத்தில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினா். அன்று மாலை பெண்கள் முளைப்பாரியை எடுத்து ஊா்வலமாகச் சென்று கண்மாயில் கரைத்தனா்.

விழாவின் முக்கிய நாளான செவ்வாய்க்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகா், புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 35 காளைகள், நூற்றுக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் கலந்து கொண்டனா்.

காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளைகளுக்கும் பணம், குத்துவிளக்கு, பீரோ, கட்டில் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்தப் போட்டியை கோவிலாங்குளம், ஆரைகுடி, எருமைகுளம், கமுதி, சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் பாா்வையிட்டனா். போட்டிக்கான ஏற்பாடுகளை கோவிலாங்குளம் கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.