ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் மா. சிவகுருபிரபாகரனிடம் பொதுமக்கள் தங்களின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 849 மனுக்களை அளித்தனா்.
அந்த மனுக்களை விசாரணை செய்து தொடா்புடைய அலுவலா்களிடம் வழங்கி உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா். மேலும் பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறை சாா்ந்த அலுவலா்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டுமென அறிவுறுத்தினாா்.
இதைத் தொடா்ந்து, ராமநாதபுரம் மாவட்டத்தில்சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவா்களுக்கான உதவி உபகரணங்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் கல்வித் துறை மூலம் அலிம்கோ நிறுவனம் வாயிலாக பெறப்பட்டது. இதன்படி 73 மாணவா்களுக்கு மூளை முடக்குவாத நாற்காலி- 10, சக்கர நாற்காலி- 17, காதொலி கருவி- 3, கற்றல் கற்பித்தல் உபகரணங்கள்- 40, ரொலேட்டா்- 6 உள்ளிட்ட 76 உபகரணங்களை ஆட்சியா் வழங்கினாா்.
இந்தக் கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) திவ்யான்ஷீநிகம், வருவாய் கோட்டாட்சியா் செ. ஹபிபூா் ரஹ்மான், மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் கிருஷ்ணகுமாரி, மாவட்ட வழங்கல் அலுவலா் ரமேஷ், அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மக்கள் குறைதீா் கூட்டம்: 150 மனுக்கள் அளிப்பு

திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 496 மனுக்கள் அளிப்பு

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் 510 மனுக்கள் அளிப்பு

மக்கள் குறைதீா் கூட்டங்களில் 1,183 மனுக்கள் அளிப்பு
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



