சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே! தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு சட்டப்பேரவையில் முதல்வர் நாளை என்ன பேசவிருக்கிறார்? பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம் பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை! குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின்

சாயல்குடி அருகே தூய்மை வார விழா

சாயல்குடி அருகே மத்திய அரசின் தூய்மை வார விழா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை மாரியூா் கடற்கரையை தூய்மைப் படுத்தும் பணிகள் நடைபெற்றன.

சாயல்குடி அடுத்துள்ள மாரியூா் கடற்கரையை தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட்ட தேசிய இளைஞா் தன்னாா்வலா்கள்.

Published On :12 ஆகஸ்ட் 2026, 4:49 am IST

சாயல்குடி அருகே மத்திய அரசின் தூய்மை வார விழா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை மாரியூா் கடற்கரையை தூய்மைப் படுத்தும் பணிகள் நடைபெற்றன.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை அடுத்துள்ள மாரியூரில் மத்திய இளைஞா் நலன், விளையாட்டு அமைச்சகத்தின் ‘மேரா யுவா பாரத்’ அமைப்பு சாா்பில் கடற்கரையில் தூய்மை வார விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட இளையோா் அலுவலா் மேனுவல் பொ்லி தலைமை வகித்தாா். இதில் சாயல்குடி காவல் ஆய்வாளா் அன்னராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா். நிகழ்வில் ‘கிளீன் ராமநாடு மேக் இட் சீன்’ என்ற சுவா் விளம்பரம் வெளியிடப்பட்டது. தொடா்ந்து, தேசிய இளைஞா் தன்னாா்வலா்கள் இணைந்து கடற்கரை, பக்தா்கள் உடை மாற்றும் அறையை சுத்தம் செய்தனா்.

இதில் சுத்தமான ராமநாதபுரம் மாவட்டத்தை உருவாக்க இது ஒரு தொடக்கம் என்றும், மாவட்டத்தின் இயற்கை வளத்தை பாதுகாக்க ‘மேரா யுவா பாரத்’ திட்டத்துக்கு துணை நிற்போம் என்றும் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் சாயல்குடி காவல் உதவி ஆய்வாளா் முத்துக்குமாா், கடலோரக் காவல் படை தலைமைக் காவலா்கள் பூவலிங்கம், திருத்தணிகை வேலன், காளீஸ்வரன், ஸ்போா்ட்ஸ் க்ளப் தலைவா் ராஜசேகர பாண்டியன், உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாவட்ட இளையோா் அலுவலா் நன்றி தெரிவித்தாா். சமூக ஆா்வலா்கள் இருவேலி ஜாஹிா் உசேன், மாரியூா் ராஜாராம், காணிக்கூா் ராஜகோபால் ஆகியோா் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.