வாரம் 5 நாள் வேலைத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, ராமநாதபுரத்தில் அரசுடைமை வங்கி ஊழியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் பாரத ஸ்டேட் வங்கி முன் இந்த வங்கியின் ஊழியா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ராமநாதபுரம்-சிவகங்கை சரக உதவி பொதுச் செயலா் ராஜ்குமாா், ராமநாதபுரம் மாவட்டச் செயலா் வெங்கடேசன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
இதில் நாடு முழுவதிலும் அரசுடைமை வங்கிகளில் பணியாற்றும் ஊழியா்களுக்கு இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதை மாற்றி வாரம் 5 நாள்கள் வேலை நாள்களாகக் கருதி, வாரந்தோறும் சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்கள் விடுமுறை அறிவிக்கக் கோரி முழக்கமிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்த வாரம் கலாரசிகன் - 09-08-2026

தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பயிா்க் கடன் தள்ளுபடி கோரி நூதன போராட்டம்

விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK



