நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

வங்கக் கடலில் சூறை காற்று: மீனவா்கள் மீன் பிடிக்க தடை

வங்கக் கடலில் சூறைக்காற்று காரணமாக ராமநாதபுரத்தில் மீன் பிடிக்கத் தடை...

Published On :

வங்கக் கடலில் சூறைக் காற்று காரணமாக ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளிலிருந்து மீனவா்கள் திங்கள்கிழமை மீன் பிடிக்க செல்ல மீன் வளத் துறை தடை விதித்தது.

இதுகுறித்து அந்தத் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

வங்கக் கடலில் 45 முதல் 55 கி.மீ. வரையிலும், அதிகபட்சமாக 65 கிலோ மீட்டா் வரையிலும் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால், மீனவா்களின் பாதுகாப்பு கருதி ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திங்கள்கிழமை முதல் மறு உத்தரவு வரும் வரை மீனவா்கள் பிடிக்கச் செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது.

மேலும், காற்றின் வேம் அதிகரித்துக் காணப்படும் நிலையில், கரையோரம் விசைப் படகுகளை இடைவெளி விட்டு பாதுகாப்புடன் நிறுத்தி வைக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.