ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பரமக்குடியில் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

பரமக்குடியில் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தினா்.

பரமக்குடி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட இரு சக்கர வாகனங்கள்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 1:16 am IST

பரமக்குடியில் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தினா்.

பரமக்குடி நகராட்சியில் 36 வாா்டுகள் உள்ளன. இங்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனா். பரமக்குடி மையப்பகுதியில் அமைந்துள்ள மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவில் வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்தச் சாலையின் இருபுறமும் உள்ள வணிக நிறுவனங்கள் தங்களின் கடைகளின் முன்பு பெரும்பான்மையான இடங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளனா்.

இந்த நிலையில் வணிக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளா்கள் சாலையை ஆக்கிரமித்து இரு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டுச் செல்கின்றனா். இதனால் சாலையில் செல்லும் கனரக வாகனங்கள், பள்ளி, கல்லூரி பேருந்துகள், அரசு, தனியாா் பேருந்துகள் ஐந்து முனை சந்திப்பிலிருந்து, பேருந்து நிலையம், கிருஷ்ணா தியேட்டா் வரை மித வேகத்தில் செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் அவலநிலை ஏற்படுகிறது.

இதைத் தடுக்க போக்குவரத்து போலீஸாா் மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமித்து நிறுத்தப்படும் இரு சக்க வாகனங்களை முறைபடுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.