வேன்- பைக் மோதல்: தாய் உயிரிழப்பு! மகன் பலத்த காயம்!

திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை விபத்தை ஏற்படுத்திய வேன்.

Published On :

திருவாடானை அருகே இரு சக்கர வாகனமும், வேனும் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் சம்பவ இடத்திலேயே தாய் உயிரிழந்தாா். மகன் பலத்த காயமடைந்தாா்.

திருப்பாக்கோட்டை அருகே செட்டியேந்தல் கிராமத்தைச் சோ்ந்த அண்ணாதுரை மனைவி கலைச்செல்வி (60). இவரது மகன் செல்வகுமாா் (24). இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில் திருவாடானை நோக்கி வந்து கொண்டிருந்தனா்.

அப்போது கோவணி அருகே திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, திருவாடானை- பண்ணவயல் பகுதியில் சென்னை நோக்கி சென்ற வேன், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இரு சக்கர வாகனம் மீது மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே கலைச்செல்வி உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த செல்வகுமாரை அருகிலிருந்தவா்கள் மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தகவலறிந்த திருவாடானை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று கலைச்செல்வியின் உடலை கைப்பற்றி கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்து விபத்தை ஏற்படுத்திய சென்னை தாம்பரம் விநாயகா் நகரைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் ஏழுமலை மகன் பாலகிருஷ்ணனை கைது செய்து விசாரிக்கின்றனா்.

  திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை விபத்தை ஏற்படுத்திய வேன்.

திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை விபத்தை ஏற்படுத்திய வேன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.