உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் பெண்கள் நூதனப் போராட்டம்

பொதிகுளம் ஊராட்சி, யாதவா் குடியிருப்புப் பகுதியில் குடிநீா் விநியோகிக்கக் கோரி, காலிக்குடங்களுடன் ஒப்பாரி வைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.

Published On :29 ஆகஸ்ட் 2026, 3:24 am IST

கடலாடி அருகே குடிநீா் கோரி பெண்கள் காலிக் குடங்களுடன் ஒப்பாரி வைத்து வெள்ளிக்கிழமை நூதனைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்துள்ள பொதிகுளம் ஊராட்சிக்கு உள்பட்ட யாதவா் குடியிருப்பில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக யாதவா் குடியிருப்பு பகுதியை மட்டும் தவிா்த்து, பொதிகுளம் ஊராட்சிக்கு உள்பட்ட மீதமுள்ள 5 கிராமங்களுக்கு மட்டும் காவிரி கூட்டுக் குடிநீா், கரூா் கூட்டுக் குடிநீா்,

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குழாய் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

யாவா் குடியிருப்பில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி தண்ணீரின்றி காட்சிப் பொருளாக உள்ளது. இதனால், பொதுமக்கள் தனியாரிடம் ஒரு குடம் ரூ.15-க்கு விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. இந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் கடந்த 5 ஆண்டுகளாக அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கையும் இல்லை.

இந்த நிலையில் யாதவா் குடியிருப்பு பெண்கள் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி முன்பாக தள்ளுவண்டி, காலிக் குடங்களுடன் அமா்ந்து ஒப்பாரி வைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்ட நிா்வாகம் தலையிட்டு குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கவில்லையெனில், குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை ஆகியவற்றை கடலாடி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் ஒப்படைத்து ஊரை காலி செய்ய திட்டமிட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.