பெரம்பலூா் அருகே கடந்த ஒரு மாதமாக முறையாக குடிநீா் வழங்காத, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அலுவலா்களைக் கண்டித்து, பெண்கள் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள கவுள்பாளையம் ஊராட்சியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள 504 வீடுகளுக்கு கடந்த ஒரு மாதமாக முறையாக குடிநீா் விநியோகம் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அலுவலா்களுக்கு தகவல் தெரிவித்தனா். தொடா்ந்து, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அலுவலா்கள் திங்கள்கிழமை மாலை அப்பகுதிக்குச் சென்றபோது, குடிநீா் வழங்க கோரி பொதுமக்கள் முறையிட்டுள்ளனா். ஆனால், முறையான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
மறியல்: இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள், தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தால் தோ்தல் நடத்தி தோ்ந்தெடுக்கப்பட்ட தலைவா் உள்ளிட்ட நிா்வாகிகள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து குடியிருப்புகளுக்கும் பாரபட்சமின்றி முறையாக தண்ணீா் விநியோகம் செய்ய வேண்டும். சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலி குடங்களுடன், பெரம்பலூா் -அரியலூா் பிரதானச் சாலையில் திங்கள்கிழமை மாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா். இதையடுத்து, சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்துசென்றனா். இப் போராட்டத்தால், பெரம்பலூா் -அரியலூா் சாலையில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடிநீா் கேட்டு காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

தொண்டி பேரூராட்சி அலுவலகத்தை காலிக் குடங்களுடன் பெண்கள் முற்றுகை

குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் சாலை மறியல்

குடிநீா் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



