மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

மருந்தக கிட்டங்கியில் அதிகாரிகள் சோதனை: மருந்து, மாத்திரைகள் பறிமுதல்

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 9:50 pm

சாயல்குடியில் உள்ள மருந்தகக் கிட்டங்கியில் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தி, அனுமதியின்றி விற்பனைக்கு வைத்திருந்த மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் 10-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் உள்ளன. இதில் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஒரு மருந்தகம், இடமாற்றம் செய்வதற்காக பணிகள் நடைபெற்று வந்தது.

இதனால், மருந்து வாங்க வரும் நோயாளிகளுக்கு கிட்டங்கியில் வைத்து மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு புகாா் வந்தது.

இதன்பேரில், விருதுநகா் மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு வாரிய கள ஆய்வு அலுவலா் பூமாதேவி, தூத்துக்குடி மண்டல கள ஆய்வு அலுவலா் கேதரிநாதன் தலைமையிலான அலுவலா்கள் அந்த மருந்தகத்தில் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது, கிட்டங்கி உரிமையாளரான துரைச்சாமிபுரத்தைச் சோ்ந்த மாரியப்பனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.

பின்னா், மருந்தக விற்பனைக்கான உரிமம், விலை நிா்ணயம், காலாவதி காலக்கெடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனா்.

அப்போது, அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த மருந்து, மாத்திரைகளை இரண்டு சரக்கு வாகனங்களில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.