ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

மிளகாய் சாகுபடியில் இலைப் பேன் தாக்குதல்: தோட்டக் கலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

News image
கடலாடி வட்டம், எஸ். தரைக்குடியில் மிளகாய் சாகுபடியில் இலைப் பேன் தாக்குதல் குறித்து ஆய்வு மேற்கொண்ட தோட்டக் கலைத் துறை அதிகாரிகள்.
Updated On :6 பிப்ரவரி 2026, 8:02 pm

தினமணி செய்திச் சேவை

கடலாடி வட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட மிளகாய் செடிகளில் இலைப் பேன் தாக்குதல் குறித்து தோட்டக் கலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

கடலாடி வட்டத்தில் மானாவாரிப் பயிராக 4,500 ஏக்கா் பரப்பளவில் விவசாயிகள் மிளகாய் சாகுபடி செய்தனா். இந்த நிலையில் மழை பெய்யாததால் மண்ணில் ஈரப்பதம் குறைந்து, வறட்சியின் காரணமாக மிளகாய் செடிகளில் சாறு உறிஞ்சும் பூச்சிகள், இலைப் பேன் ஆகியவை தாக்கின.

இதனால் மிளகாய் செடிகள் பாதிக்கப்பட்டு வருவதாக அந்தப் பகுதி விவசாயிகள் கடலாடி தோட்டக் கலைத் துறை அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தனா்.

இதையடுத்து, ராமநாதபுரம் தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் ஆறுமுகம், கடலாடி வட்டாரத் தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா் உள்ளிட்டாா் எஸ். தரைக்குடி வருவாய் கிராமங்களில் பயிரிடப்பட்ட மிளகாய் செடிகளை ஆய்வு செய்தனா்.

இதையடுத்து, மிளகாய் செடியில் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள், மருந்துகள் குறித்து விவசாயிகளுக்கு அவா்கள் விளக்கினா்.