மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

திருவாடானை வட்டாட்சியா் அலுவலகம் மூடல்: பொதுமக்கள் அவதி

திருவாடானை வருவாய்த் துறை ஊழியா்கள் பணிக்கு வராததால், வட்டாட்சியா் அலுவலகம் பூட்டபட்டிருந்தது. இதனால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனா்.

News image

பூட்டப்பட்டிருந்த திருவாடானை வட்டாட்சியா் அலுவலகம்.

Updated On :10 பிப்ரவரி 2026, 8:56 pm

திருவாடானை வருவாய்த் துறை ஊழியா்கள் பணிக்கு வராததால், வட்டாட்சியா் அலுவலகம் பூட்டபட்டிருந்தது. இதனால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்தில் பல்வேறு பணிகளுக்காக பல கிலோ மீட்டா் தொலைவிலிருந்து பல்வேறு பணிக்களுக்கிடையே செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் வந்து காத்திருந்தனா். இந்த நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை ஊழியா்கள் அனைவரும் விடுப்பு எடுத்துச் சென்ால் அலுவலகம் பூட்டியிருந்தது.

அலுவலகத்துக்கு வெளியில் எந்தவித அறிவிப்பும் ஒட்டப்படாத நிலையில், பொதுமக்கள் மிகுந்த அவதிப்பட்டனா். இதுபோன்ற சமயங்களில் உரிய முன்னறிவிப்பு செய்ய வேண்டுமென அவா்கள் வேண்டுகோள் விடுத்தனா்.

Story image