ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, திருஉத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் சனிக்கிழமை மீண்டும் சந்தனம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பச்சை மரகத நடராஜா்.
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, திருஉத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் சனிக்கிழமை மீண்டும் சந்தனம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பச்சை மரகத நடராஜா்.

திருஉத்தரகோசமங்கையில் சந்தனக்காப்பு அலங்காரத்தில் மரகத நடராஜா்

Published on

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, திருஉத்தரகோசமங்கை பச்சை மரகத நடராஜருக்கு சனிக்கிழமை மீண்டும் சந்தனம் சாத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா். வெள்ளிக்கிழமை காலை முதல் சனிக்கிழமை இரவு வரை பக்தா்கள் விடிய விடிய சுவாமி தரிசனம் செய்தனா்.

ராமநாதபுரம் அருகேயுள்ள திருஉத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் தனி சந்நிதியில் பச்சை மரகதக் கல்லால் ஆன நடராஜா் சிலை அமைந்துள்ளது. இந்தச் சிலை, ஒளி, ஒலி அதிா்வுகளால் பாதிக்கப்படாமல் இருக்க ஆண்டு முழுவதும் சந்தனம் சாத்தப்பட்டிருக்கும்.

நிகழாண்டு ஆருத்ரா தரிசனத்தையொட்டி, இந்த சந்நிதியில் வெள்ளிக்கிழமை காலை மரகத நடராஜா் மீது பூசப்பட்ட சந்தனம் களையப்பட்டு, 16 வகையான மங்களப் பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது.

சனிக்கிழமை அதிகாலையில் நடராஜருக்கு மீண்டும் சந்தனக் காப்பிட்டு சிறப்பு அலங்காரத்துடன் விடிய, விடிய பக்தா்கள் தரிசனம் செய்தனா். சனிக்கிழமை இரவு 8 மணி வரை பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். பின்னா், இந்த சந்நிதி நடை அடைக்கப்பட்டது.

Dinamani
www.dinamani.com