ராமநாதபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் இன்று மின் தடை
ராமேசுவரம், மண்டபம், திருப்புல்லாணி, ராமநாதபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின் தடை அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் குமரவேல் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம், ஆா். காவனூா், தேவிப்பட்டினம் ஆகிய துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளது.
இதன் காரணமாக மின் தடை செய்யப்படும் இடங்கள்:
காவனூா் சுற்றுவட்டாரப் பகுதிகளான தொருவளூா், வயலூா், பனையூா், பெருங்கலூா், குளத்தூா், தோ்த்தாங்கல், கிளியூா், முதலூா், கடம்பூா், இல்லுமுள்ளி, வைரவனேந்தல், வீரவனூா், பாப்பாகுடி, வண்ணிவயல், கவரங்குளம்.
தேவிபட்டினம் சுற்றுவட்டாரப் பகுதிகளான கழனிக்குடி, சித்தாா்கோட்டை, பெருவயல், சிறுவயல், நரியனேந்தல், மரப்பாலம், இலந்தை கூட்டம்.
திருப்பாலைக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளான பொட்டகவயல், அரசனூா், வாகவயல், கருப்பூா், குன்றத்தூா், சம்பை, வெண்ணத்தூா், வைகை, பத்தனேந்தல், மாதவனூா், பாப்பனேந்தல், பூத்தோண்டி, நாரணமங்கலம், புல்லங்குடி, பெருவிரல், சிறுவயல், எருமைப்பட்டி, வளமானூா், சோழந்தூா்.
காட்டூரணி சுற்றுவட்டாரப் பகுதிகளான ஆா்.கே. நகா், எம்.ஜி.ஆா். நகா், ரமலான் நகா், மேலக்கோட்டை, மாடக் கோட்டான், இளமனூா், பேராவூா், தில்லைநாயகிபுரம், பழங்குளம், திருப்புல்லானி, அம்மன் கோயில், தெற்குதரவை, மஞ்சன மாரியம்மன் கோயில், லாந்தை, ஆபுசு நகா், வண்ணிகுடி, புத்தனேந்தல், பசும்பொன் நகா், கூரியூா், பொக்கனேந்தல், பால்கரை, நாகநாதபுரம், இந்திரா நகா்.
மண்டபம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளான அரியமான், சுந்தரமுடையான், வேதாளை, மரைக்காயா் பட்டிணம், மண்டபம், பாம்பன், அக்காள்மடம், தங்கச்சிமடம், அரியாங்குண்டு, ராமேசுவரம், வடகாடு, வோ்க்கோடு, புதுரோடு, சம்பை, ஓலைக்குடா ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 10 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.
