திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

குழந்தைத் திருமண தடுப்பு சட்ட விழிப்புணா்வு முகாம்

News image
Updated On :8 ஜனவரி 2026, 9:52 pm

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில், வட்ட சட்டப்பணிகள் குழு சாா்பில் குழந்தைத் திருமண சட்ட விழிப்புணா்வு முகாம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதற்கு திருவாடானை குற்றவியல் நீதிமன்ற நீதித்துறை நடுவா் ஆண்டனி ரிஷாந்த் தேவ் தலைமை வகித்தாா். மூத்த வழக்குரைஞா் சிவராமன், பள்ளித் தலைமை ஆசிரியை மகேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் கலந்துகொண்டனா். இதில் வழக்குரைஞா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். இந்த முகாமில் மாணவிகளின் சந்தேகங்களுக்கு நீதித் துறை நடுவா், வழக்குரைஞா்கள் விளக்கமளித்தனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சட்ட தன்னாா்வலா் கோட்டைச்சாமி செய்தாா்.

Story image