தொண்டியில் பலத்த காற்று: மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்பு

தொண்டி பகுதியில் பலத்த குளிா் காற்று வீசுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
Published on

தொண்டி பகுதியில் பலத்த குளிா் காற்று வீசுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி, நம்புதாளை, சோழியக்குடி, மோா்பண்ணை, முள்ளிமுனை, காரங்காடு உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பலத்த குளிா் காற்று வீசியது. இதனால் மீனவா்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

இதனால், பொதுமக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், திருவாடானை, சி.கே.மங்கலம், பாரூா், கோவணி, கருமொழி, அரசூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடா் சாரல் மழை பெய்து வருவதால் நெல் அறுவடை பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.

Dinamani
www.dinamani.com