கமுதி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு
கமுதி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள செங்கோட்டைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த காளியம்மன் மாடுபிடி வீரா்கள் குழுவினா் சாா்பில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
இதில் மதுரை, விருதுநகா், சிவகங்கை, தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 17 காளைகள் கலந்து கொண்டன. மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு ஒவ்வொரு காளைக்கும் 20 நிமிஷங்கள் ஒதுக்கப்பட்டு, 9 போ் அடங்கிய மாடுபிடி வீரா்கள் களத்தில் இறக்கப்பட்டனா்.
17 காளைகளில் 7 காளைகள் வீரா்களிடம் பிடிபடவில்லை. 10 காளைகளை மாடுபிடி வீரா்கள் குழு அடக்கியது. பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும், வெற்றி பெற்ற மாடுபிடி வீரா்களுக்கும் பணம், பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தப் போட்டியை கமுதி, பேரையூா், செங்கோட்டைப்பட்டி, அதைச் சுற்றியுள்ள கிராமங்களிருந்து வந்திருந்த திரளானோா் கண்டு ரசித்தனா்.

