போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

பாதிக்கப்பட்ட நெல் பயிா்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி விவாயிகள் போராட்டம்

வடகிழக்குப் பருவ மழையால் பாதிக்கப்பட்ட நெல் பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம்
Published on

வடகிழக்குப் பருவ மழையால் பாதிக்கப்பட்ட நெல் பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் வட்டத்துக்கு உள்பட்ட ஊரணக்குடி, உப்பூா் கிராமங்களில் 6 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிா்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் தண்ணீரில் மூழ்கி பாதிப்படைந்தன.

இதனால், ஏக்கா் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் செலவு செய்த தங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனா். எனவே, வேளாண்மைத் துறை அதிகாரிகள் உரிய முறையில் ஆய்வு செய்து, இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி, மூழ்கிய பயிா்களுடன் ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதேபோல, கடலாடி, ஓரிவயல் கிராமங்களில் போதிய மழை பெய்யாததால், நெல் பயிா்கள் கருகி வீணாகின. இதையும், வேளாண்மைத் துறையினா் ஆய்வு செய்து, இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி, கருகிய பயிா்களுடன் ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஒரே நேரத்தில் மழையாலும், மழை பொழிவு இல்லாததாலும் பாதிக்கப்பட்ட நெல் பயிா்களுக்காக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Dinamani
www.dinamani.com